ரஷ்யா-உக்ரைன் போரில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைதல் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மவுன் என்ற இளைஞர் கடந்த ஜனவரி 13ம் தேதி ஒட்டுநர் வேலைக்காக ரஷியா சென்றார்.
ஆனால், அங்கு ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட அவர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டார். போரின் போது உக்ரைன் ராணுவத்தால் ரவி மவுன் கொல்லப்பட்டார் என மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.