தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலுப்பையூரணி கிராமத்தை சேர்ந்த ராஜாத்தியின் மகன் நிதீஷ் குமாருக்கு, மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் கடந்த 26-ம் தேதி உயிரிழந்தார்.
மகனின் உயிரிழந்த துக்கத்தை தாங்க முடியாமல் தாய் ராஜாத்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.