திருவட்டாரில் காங்கிரஸ் நிர்வாகி படுகொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய சாலை மறியலில் ஈடுபட்ட 3 எம்எல்ஏக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மூவாற்றுமுகம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ஜாக்சன் என்பவர் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரி திருவட்டார் காவல் நிலையத்தில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், மற்றும் எம்எல்ஏக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருவட்டார் காவல் நிலையம் சந்திப்பில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மார்த்தாண்டம் – பேச்சிப்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்படத்தில் தங்கவைத்தனர்.