திராவிட மண்ணிலிருந்துதான் பக்தி இலக்கியங்கள் நாடு முழுவதும் சென்றடைந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உளள தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற கருமுத்து தியாகராச செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக நாடு முழுவதும் திருவாசகம் போன்றவை ஆவணப்படுத்தப்பட்டதாகவும், பிரிட்டிஷ் ஆட்சியில் அது அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் வணிக நோக்கத்திலேயே தொடங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
அரசியல் சூழல் நம் அடிப்படை பாடத்திட்டத்தை மாற்றிவிட்டதாக குறிப்பிட்ட ஆளுநர், நாம் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல உள்ளதாகவும் கூறினார். உலகில் எழுத்தறிவின்மை இல்லாத முதன்மை நாடாக இந்தியா மாறும் என அவர் குறிப்பிட்டார்.