நடிகர் தனுஷுக்கு ஆதரவு அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!
Sep 11, 2025, 05:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் தனுஷுக்கு ஆதரவு அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

Web Desk by Web Desk
Jul 30, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக எடுத்த முடிவை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய படம் நடிக்க கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், சென்னை தி. நகரில் நடிகர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி , துணை தலைவர்கள் பூச்சி முருகன், மற்றும் கருணாஸ் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷால் காணொளி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். மேலும் இக்கூட்டத்தில் செயற்குழு நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி பேசுகையில்,

திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கம் & நடிகர் சங்கம் நல்ல உடன்பாட்டில் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இதற்கு முன் நடிகர் சங்கம் சார்ந்த பிரச்சினையோ தயாரிப்பாளர் சார்ந்த பிரச்சினையோ எப்போதும் கலந்து ஆலோசித்து இரண்டு பக்கமும் குழுக்கள் அமைத்து தான் முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை தன்னிச்சையாக  (யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல்) வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு புகாரும், வேலை நிறுத்தமும் முடிவெடுத்துள்ளனர். அது தொடர்பாக தலைவரிடமும் செயலாளரிடமும் வீடியோ கான்பரன்ஸில் பேசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

தயாரிப்பாளர் சங்கம் திடீரென எடுத்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. ரொம்ப வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பான அடுத்த தீர்மானங்களை அடுத்த செயற்குழுவில் நிச்சயமாக எடுப்போம். இதுவரை பேசிய விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டு வந்தது. பிரச்சினையையும் தீர்த்து வருகிறோம். ஆனால் இந்த பிரச்சினை குறித்து அவர்கள் அளித்த புகார் எதுவும் எங்களிடம் வரவில்லை.

எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் வராத நிலையில், திடீரென அவர்கள் அறிக்கையை வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கான விளக்கத்தையும் நாங்கள் எங்கள் அறிக்கையில் கேட்டிருக்கிறோம்.

தொடர்ந்து இனிமேல் அவர்கள் பணியாற்ற முடியாது என்பது தவறான வார்த்தை பிரயோகம் என்று நினைக்கிறேன்.‌ அது தவறான விஷயம் அந்த முன்னெடுப்பை எதனால் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.‌ படப்பிடிப்பை நிறுத்துவது என்பது, எத்தனையோ தொழிலாளர்கள் சார்ந்த விஷயம். அதை எப்படி அவர்களே முடிவு எடுக்க முடியும் என்பதும் சந்தேகத்திற்குரியது. இது லீகலே கிடையாது. யாரிடமும் கலந்தாலோசிக்காமல் வேலைநிறுத்தம் முடிவை எடுக்க கூடாது. பெப்சிக்கு தெரியுமா இந்த விஷயம்? எனத் தெரிவித்தார்.

நடிகர் சங்க துணை தலைவர் கருணாஸ் பேசுகையில்,

எல்லா சங்கத்தையும் கலந்து ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் அதுதான் மரபு. கடந்த காலங்களில் அப்படித்தான் நடந்திருக்கிறது. இந்த முறை தன்னிச்சையாக தயாரிப்பாளர் சங்கம் அந்த முடிவை அறிவித்ததுள்ளது.

நடிகர் சங்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது. அதே மாதிரி நடிகர்களும் பல படங்களுக்கு தேதி கொடுத்து, திடீரென அவர்களின் தொழிலை முடக்குவது என்பது நியாயமற்ற செயல். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதே போல் இதற்கான முடிவை சங்கத்தின் சார்பில் எழுத்துப்பூர்வமாக கொடுத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Tags: The South Indian Actors' Association strongly condemned the Tamil Film Producers' Association!The South Indian Actors Association supported actor Dhanush!
ShareTweetSendShare
Previous Post

சென்னை வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு! – இணையமைச்சர் நித்யானந்த் ராய்

Next Post

தலித் மக்களுக்கு எதிரான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது! – வினோஜ் பி.செல்வம்

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies