கரூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூரைச் சேர்ந்த ஜீவா என்ற இளைஞர் காணாமல்போன புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜீவாவின் செல்போனில் உள்ள எண்களின் அடிப்படையில் 9 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், 2021ல் மோகன்ராஜ் என்பவரின் கொலையில் அவரது நண்பரான சசிகுமார் ஜீவாவிற்கு மது கொடுத்து கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.