கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, பாட்டியும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, சோலையார் அணையின் இடது கரைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முத்துலட்சுமி என்ற பெண்மணியும், அவரது பேத்தியான தனபிரியா என்ற 15 வயது சிறுமியும் உயிரிழந்தனர். இதேபோன்று, திப்பன்பட்டி பகுதியில், கனமழையால் வீடு இடிந்து விழுந்து, ஹரிஹரசுதன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இந்த இருவேறு சம்பவங்களின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.