கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்பட 250 பேர் ஈடுபட்டுளனர். மேலும், தொடர் மீட்புப்பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.