டெல்லியில் நாளை மறுநாள் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தலைமையில் ஆளுநர்கள் மாநாடு நடைபெறுகிறது.
குடியரசு தலைவர் மாளிகையில் நாளை மறுநாள் தொடங்கும் இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில ஆளுநர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த மாநாட்டில், நாட்டின் வளர்ச்சி சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையில் முதல் ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.