தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பு ரத்து! - அண்ணாமலை வரவேற்பு
Sep 13, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பு ரத்து! – அண்ணாமலை வரவேற்பு

Murugesan M by Murugesan M
Jul 31, 2024, 11:09 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்டம் குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தென்காசி மாவட்டம் குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை, மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்திருப்பதைத் தமிழக பாஜக சார்பில் மனமார வரவேற்கிறோம்.

குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழக அரசும் இதற்கான ஒப்புதலை வழங்கியிருந்ததாக அறிகிறோம்.

ஆனால், குறிஞ்சான்குளம் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், தங்கள் பகுதியில் தாது மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கங்களிற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டபோது அதை ரத்து செய்திடத் தமிழக பாஜக எடுத்த முன்னெடுப்பைப் போல, இந்த கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம்.

மூத்த அரசியல் தலைவரும், வழக்கறிஞருமான, திரு. KS ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களை நேரில் சந்தித்து, பொதுமக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, குறிஞ்சான்குளம் பகுதியில், தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று, குறிஞ்சான்குளம் பகுதியில் தாதுமணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ள மத்திய அரசுக்கு, தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும், தென்காசி மாவட்ட பாஜக சார்பிலும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்காக மீண்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோருகையில் அப்பட்டியலிலிருந்து குறிஞ்சான்குளம் நிரந்தரமாக நீக்கப்படும் என்ற நம்பிக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Tags: Canceled the tender notification for the mining of ore sand! - Annamalai welcome
Share
Tweet
SendShare
Previous Post

நாளை மறுநாள் நடைபெறுகிறது ஆளுநர்கள் மாநாடு!

Next Post

இந்திய வீரர்களின் இன்றைய போட்டிகள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies