பாரீஸ் ஒலிம்பிக் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டியின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பகல் 12.30 மணிக்கு நடைபெறும், துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஆண்களுக்கான 50 மீட்டர் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஐஸ்வரி தோமர் மற்றும் ஸ்வப்னில் குசாலே பங்கேற்கின்றனர்.
பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் லீக் சுற்றில் முன்னணி வீராங்கனை பி.வி சிந்து எஸ்தோனியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் கூபாவுடன் மோதுகிறார். இந்த ஆட்டம் பகல் 12.50 மணிக்கு நடைபெறுகிறது.
இதையடுத்து நடைபெறும் 2-ம் சுற்றில் லக்ஷயா சென் இந்தோனேசியா வீராங்கனையான ஜோனதனை எதிர்கொள்கிறார். . இந்த போட்டி பிற்பகல் 1.40 மணிக்கு நடைபெறுகிறது.
இரவு 11 மணியளவில் நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் லீக் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் உடன் வியட்நாம் வீரர் டக் பாட்லீ மோதுகிறார்.
பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஸ்ரீஜா அகுலா சிங்கப்பூர் வீராங்கனையான ஜெங் ஜியான் உடன் மோதுகிறார்.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் ஈகுவடார் வீரரான ஜோஸ் கேப்ரியல் உடன் மோதுகிறார்.
பெண்கள் 75 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கணை லவ்லினா போர்கோஹன் உடன் நார்வே வீராங்கனை சன்னிவா ஹாப்ஸ்டட் மோதுகிறார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3.50 மணிக்கு நடைபெறுகிறது. வில்வத்தை பேட்டியை பொறுத்தவரை பெண்கள் தனி நபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி எஸ்தோனியா வீராங்கன ரீனாவை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் மாலை 3.56 மணிக்கு நடைபெறுகிறது.
ஆண்கள் தனி நபர் பிரிவு வில்வித்தை போட்டி இரவு 9.28 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சுற்றில் இந்திய வீரர் தருண்தீப் ராய் இங்கிலாந்து வீராரான டாம் ஹால் உடன் மோதுகிறார்.