சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு ஒரே நேரத்தில் மனு கொடுக்க வந்தனர்.
திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் சுமார் 11.25 ஏக்கர் நிலத்தில் தனியார் தொழிற்சாலைகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளன.
எனவே, நீதிமன்ற தீர்ப்பின்படி கிராம புறம்போக்கு இடங்களில் வீடு இல்லாதவர்களுக்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.