திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சுவர் இடிந்து விழுந்ததில் இலங்கை அகதி முகாமை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
சென்மேரிஸ் தெருவில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த சதீஷ் என்பவர் பழுதடைந்த கழிவுநீர் கால்வாயை ஆழப்படுத்தி சீரமைக்க பள்ளம் தோண்டியுள்ளார்.
அப்போது அருகே இருந்த சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் சதீஷ் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.