சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் சொந்த செலவில் வாய்க்கால் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வயல்களுக்கு தண்ணீர் செல்லும் கன்னி வாய்க்கால் எனப்படும் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் 367 கிலோ மீட்டர் நீளத்துக்கு தூர்வாரப்பட்டுள்ளன.
இந்த வாய்க்கால்கள் மூலம் வயல்களுக்கு தண்ணீர் செல்ல இருப்பதால், நிலத்தை சமப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.