ரத்த புற்றுநோயால் பாதிப்படைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்.
பரோடாவைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட், 71 வயதுடைய இவர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் பயிற்சியாளராக இருந்தார்.
இந்நிலையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டன் கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உயிரிழப்பு செய்தியை அறிந்த பிரதமர் மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அன்ஷுமன் கெய்க்வாட் ஒரு திறமையான வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளராக இருந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கெய்க்வாட்டை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கல் எனவும் பதிவிட்டுள்ளார்.