மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழகத்துடன் பேச முடியாது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியின் குரூர எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளது என பாஜக மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
மூச்சுக்கு முந்நூறு முறை ‘INDI’ கூட்டணி என்று மார்தட்டிக் கொள்ளும் இவ்விரு கட்சிகளும் தங்கள் மாநிலங்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவும், காங்கிரஸும் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் காவிரி நீர் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி மக்களை ஏமாற்றி வருவதுடன், இந்த விவகாரத்தை தீர்க்க கூடாது என சண்டையிடுவது போன்று நடிப்பது மலிவான அரசியல், வெட்கக்கேடு என நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டியுள்ளார்.