ஈரோடு அருகே மருத்துவர் வீட்டில், 80 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்ற மருத்துவர், தமது பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக, கடந்த 30-ம் தேதி குடும்பத்தினரோடு சென்னை சென்றுள்ளார்.
இந்நிலையில், அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கொண்டு, அருகில் வசிப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
பழனிசாமி அளித்த தகவலின் அடிப்படையில் வீட்டிலிருந்த 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை, காவல் துறையினர் கண்டறிந்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில், மாவட்ட ஆட்சியர் அலுவலக குடியிருப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.