மயிலாடுதுறையில் 100 நாள் வேலையின்போது பாம்பு கடித்து பெண் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீடூர் பகுதியில் 100 நாள் பணியாளர்கள், சாலையோரத்தில் இருந்த மரக்கன்றுகளை பிடுங்கி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நட்டு வருகின்றனர். அப்போது, உடையார் கட்டளையை சேர்ந்த கலைமணியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.