ஜார்க்கண்டில் மணல் பற்றாக்குறை நிலவுவதாக கூறி, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கண்டித்து பாஜக பாஜக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராஞ்சியில் சட்டப் பேரவை வளாகத்தில் மணல் நிரப்பிய சாக்கையும் தராசையும் கொண்டுவந்து, தரையில் அமர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் முழக்கமிட்டனர்.