பாரீஸ் ஒலிம்பிக்கில் Sensation ஆகியுள்ளார் துருக்கியை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் யூசப் டிகெக். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது துருக்கி. இதே போட்டியில் தான் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியர்கள் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட அதே நிலையில், தங்கத்திற்கான போட்டியில் துருக்கி வீரர் யூசப் டிகெக் இன் casual style தற்போது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், என்னை அறிந்தால் படத்தில் வரும் அஜித் குமார் போல கேஷுவலாக தனக்கான காரியத்தை செய்து முடித்து, தங்கள் நாட்டிற்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் இந்த அசால்ட் சேது …
10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் போட்டியின் முதல் சுற்றில் இருந்தே, அவரது தொனி என்ன தெரியுமா?
மற்ற வீரர்களை போல ஒரு கண்ணை மறைத்து, மற்றொரு கண்ணில் இலக்கை துல்லியமாக பார்க்கும் லென்ஸ்கள் எதுவும் இல்லாமலும், சுடும் சத்தத்தை தடுத்து நிறுத்தும் ஏர் பட்ஸ்கள் எதுவும் இல்லாமலும் விளையாட வந்த இவர், ஒரே ஒரு மூக்கு கண்ணாடியை மட்டுமே அணிந்து, பாக்கெட்டில் கைவிட்ட படி துப்பாக்கியை நீட்டி, ஷூட் செய்வார்.
இலக்கை குறி வைக்கும் போது கூட எந்த விதமான கவனச் சிதறலும் இல்லாமல் நேர் கொண்ட பார்வையுடன் சுட்டுவிட்டு, அதே வழக்கமான பாணியில் அங்கிருந்து புறப்பட்டு செல்வார். இதை பார்க்க, பீக்கி பிளைண்டர்ஸ் வெப் தொடரில் வரும் கதாநாயகன் போல, வருவார், தான் வேலையை கவனிப்பார், அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுவார் என தனக்கென ஒரு ஸ்டைலை அரங்கேற்றினார் யூசப் டிகெக்…
இறுதிப் போட்டியில் செர்பியா தங்கமும், துருக்கி வெள்ளி பதக்கமும் வென்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, தற்போது யூசப் டிகெக் இன் ஸ்டைலை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.