போட்டித் தேர்வுகள் நடத்தியதன் மூலம் தேசிய தேர்வு முகமை 3,512 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவு தேர்வான க்யூட், இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ., தேர்வு உள்ளிட்டவற்றை நடத்திவரும் தேசிய தேர்வு முகமையின் வருமானம் குறித்து மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பேசினார்.
அப்போது 2021-22ஆம் ஆண்டில் 490 கோடி ரூபாயும், 2022-23ம் ஆண்டில் 873 கோடி ரூபாயும், 2023-24ம் ஆண்டில் ஆயிரத்து 65 கோடி ரூபாயும் தேசிய தேர்வு முகமைக்கு வருமானம் கிடைத்துள்ளதாக சுகந்தா தெரிவித்தார். மேலும் வருமானம் ஈட்டிய தொகையில் 87.2 சதவீதம் தேர்வுகள் நடத்த செலவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.