ஸ்மார்ட்போன் உதவியால், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என ஐ.நா பொதுச்சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பாராட்டு தெரிவித்தார்.
ஐ.நா பொதுச்சபையில் பேசிய டென்னிஸ் பிரான்சிஸ், இந்தியாவில் டிஜிட்டல் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
மேலும், கிராமங்களுக்கும் வங்கி சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படுவது பாராட்டுக்குரியது என்றார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பங்கள் அடிப்படை தேவையாக இருக்கிறது எனவும் டென்னிஸ் பிரான்சிஸ் இந்தியாவை சுட்டிக்காட்டிப் பேசினார்.