நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் உள்ள 16வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சரவணன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து இவர் நெல்லை மாநகராட்சி மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்ததையடுத்து கடந்த மாதம் 3ம் தேதி மேயர் பதவியை சரவணன் ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், அமைச்சர் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு லைமையில் வண்ணாரப்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.