இஸ்ரோ-நாசா திட்டம் விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர்!
Aug 15, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ-நாசா திட்டம் விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர்!

Web Desk by Web Desk
Aug 6, 2024, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாசாவுடன் இஸ்ரோவின் முதல் கூட்டுப் பணிக்கான ‘முதன்மை விண்வெளி வீரராக’ குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதனால், விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கேப்டன் சுபான்ஷு சுக்லா பெறுகிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2024ம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிறகு, அமெரிக்காவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய விண்வெளி வீரர் தேர்வு வாரியம், இந்திய விமானப்படையின் (IAF) சோதனை விமானிகளின் குழுவிலிருந்து குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்தது.

கடந்த ஜூலை 27ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விண்வெளி வீரர்கள் ஏற்கனவே ரஷ்யாவில் அடிப்படை விண்வெளிப் பயிற்சியை முடித்துவிட்டதாகவும், பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் மேம்பட்ட பயிற்சிகளைப் பெற்று வருவதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையம், அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்ட ஆக்சிம் ஸ்பெஸ் உடன் இணைந்து சர்வ தேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவிருக்கும் நான்காவது ஆக்சிம் பணிக்காக குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு இந்தியர்களை PRIME மற்றும் BACKUP மிஷன் விமானிகளாக ஒப்பந்தம் செய்திருக்கிறது .

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறக்க மல்டிலேட்டரல் க்ரூ ஆபரேஷன் பேனல் மூலம் அங்கீகரிக்கப்படுவார்கள் என்றும், பரிந்துரைக்கப்பட்ட ககன்யாத்ரிகள் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து அதற்கான பயிற்சிகளைத் தொடங்குவார்கள் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இரண்டு விண்வெளிவீரர்களும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப செயல்விளக்க சோதனைகளை மேற்கொள்வார்கள் என்றும், விண்வெளி பயண நடவடிக்கைகளிலும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

1999ம் ஆண்டு கார்கில் போர் நடந்த போது 14 வயதான ஷுபான்ஷு சுக்லாவுக்கு இந்திய விமானப் படை வீரர்களின் வீரம் ஈர்த்தது. அப்போது தான், அவருக்கு இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பிறந்த கேப்டன் ஷுபான்ஷு சுக்லா, நேஷனல் டிஃபென்ஸ் அகாடமியில் பட்டம் பெற்றிருக்கிறார். 2006ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப்படையின் போர் விமானியாக நியமிக்கப்பட்ட சுக்லா, ஃபைட்டர் காம்பாட் லீடர் படிப்பு முடித்தார்.

Sugoi, MIG-21, MIG-29, Jaguar, Domnier, BAe Hawk மற்றும் An-32 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை சுமார் 2,000 மணிநேரத்துக்கும் மேலாக செலுத்திய அனுபவத்தைப் பெற்றிருக்கிறார் சுக்லா.

சமீபத்தில், விங் கமாண்டர் பதவிக்கு உயர்த்தப் பட்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, மனிதர்களை ஏற்றிச் செல்லும் இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணமான ககன்யானுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு இந்திய விமானப் படை அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுக்லாவுடன் தேர்ந்தெடுக்கப் பட்ட மற்றொரு விண்வெளி வீரரான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவின் திருவாழியாட்டில் பிறந்தவராவார். இவரும் நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி , படிப்பை முடித்து விட்டு , விமானப்படை அகாடமியில் கவுரவப் பட்டம் பெற்றிருக்கிறார்.

சுமார் 3,000 மணி நேரத்துக்கும் மேலாக போர் விமானங்களை செலுத்திய அனுபவத்துடன், பறக்கும் பயிற்றுவிப்பாளராகவும், சுகோய்-30 ஸ்க்ராட்ரனுக்கு தலைமை தாங்கிய சோதனை விமானியாகவும் இருக்கிறார்.

இந்த இரண்டு விண்வெளி வீரர்களும், இந்தியாவுக்குப் பெருமையை தேடி தருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Falcon 9 ராக்கெட்டில் மூலம் ஏவப்படும் SpaceX Crew Dragon விண்கலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வரும் அக்டோபரில் விண்ணுக்குப் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணி செய்ய செல்லும் குழுவில் சுக்லாவுடன் போலந்து, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் இருப்பார்கள்.

கேப்டன் சுக்லாவுக்கு BACKUP விண்வெளிவீரராக தான் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். எனவே ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கேப்டன் சுக்லா பெறுகிறார்.

இந்த விண்வெளி பயணத்தின் போது பெறப்பட்ட அனுபவங்கள் இந்திய மனித விண்வெளி திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், இஸ்ரோ மற்றும் நாசா இடையே மனித விண்வெளி விமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது .

Tags: ISRO-NASA project is the second Indian to go into space!
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் அதிரடி திருப்பம்! – பதவியை துறந்த ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்த ராணுவம்!

Next Post

பாதுகாப்பான இடத்தில் ஷேக் ஹசீனா! – மத்திய அரசு

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies