மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் கண்மணி அன்போடு பாடல் குறித்த விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா எந்த வித பணமும் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியாகிய மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அப்படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த பாடல் ஏற்கனவே குணா படத்தில் இடம் பெற்றதால், மஞ்சுமல் பாய்ஸ் படக்குழு மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இளையராஜாவுக்கு 60 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த தகவலை ஏற்க மறுத்த இளையராஜாவின் தரப்பு வழக்கறிஞர் எந்த வித பணமும் இதுவரை பெறவில்லை என தெரிவித்துள்ளார்.