திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நத்தம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர் தனது காரை சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளார். அப்போது அவ்வழியாக வந்த திமுக கவுன்சிலரின் கணவர் குமராண்டி, பிரவீனை அவதூறாக பேசியதாகவும் அவருடைய காரை உடைத்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குமாராண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.