ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை திமுக அரசு மறைக்கிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருக்கழுக்குன்றத்தில் பாஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட திருப்போரூர் தொகுதி சார்பில் வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் மோகன ராஜா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையற்றினார்.
மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், திமுக ஆட்சியில் அரங்கேறும் கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கி கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,
திமுக ஆட்சியில் தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர் மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் மின்வெட்டு ஒரு புறம் இருக்க மின்சாரம் என்றாலே ஷாக் அடிப்பதாகவும் கூறினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை திமுக அரசு மூடி மறைப்பதாகவும் இதற்காகத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
ஒரு தலைவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உருவாகி உள்ளது என்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் இல்லாமல் உள்ளதாக தெரிவித்தார்.