இங்கிலாந்தில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் நுழைந்து போராட்டக்காரர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் நடத்தியதில், 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.
7 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய 17 வயது சிறுவன், இங்கிலாந்தில் அகதியாக குடியேறிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அகதிகள் குடியேற்றத்திற்கு எதிராக இங்கிலாந்தில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.