ஆடிப்பூரம் தேர் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் சீர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அதன்படி பட்டுபுடவைகள், வஸ்திரங்கள் அடங்கிய சீர்வரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.