பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மதியம் 1.30 மணியளவில் நடைபெறும் மகளிருக்கான குழு டேபிள் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரீஜா அகுலா, மானிகா பாத்ரா, அர்ச்சனா காமத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து மதியம் 1.35 மணிக்கு நடைபெறும் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியின் தகுதி சுற்றில் இந்திய வீரர் சர்வேஷ் அனில் குஷாரே
களமிறங்குகிறார்.
இதைத்தொடர்ந்து மதியம் 1.45 மணிக்கு மகளிருக்கான 100 மீட்டர் தடையோட்டம் நடைபெறுகிறது. இதன் முதல் சுற்றில் வீராங்கனை ஜோதி யார்ராஜி போட்டியிடுகிறார்.
அடுத்தப்படியாக மதியம் 1.55 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வீராங்கனை அண்ணு ராணி பங்கேற்கிறார்.
பின்னர் மாலை 3.00 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் 53 கிலோ எடை சுற்றில் வீராங்கனை ஆண்டிம் களம் இறங்குகிறார். இதில் இவர் வெற்றி பெற்றால் மட்டுமே இன்று நடைபெறும் அடுத்த அடுத்த மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.
இதைத்தொடர்ந்து இரவு 10.45 மணிக்கு நடைபெறும் ஆடவர் மும்முறை தாண்டுதல் போட்டியின் தகுதி சுற்றில் தமிழக வீரர் பிரவீன் சித்திரவேல் மற்றும் அப்துல்லா அபூபக்கர் பங்கேற்கின்றனர்.
இதனையடுத்து இரவு 11 மணிக்கு நடைபெறும் மகளிருக்கான மல்யுத்த போட்டியின் 49 கிலோ பிரிவு சுற்றில் வீராங்கனை மீராபாய் சானு போட்டியிடுகிறார்.
இறுதியாக நள்ளிரவு 1.13 மணிக்கு ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடை ஓட்ட போட்டியின் இறுதிசுற்று நடைபெறுகிறது, இதில் வீரர் அவினாஷ் சாப்லே போட்டியிடுகிறார்.