மாநில அளவில் வக்ஃபு வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய வக்ஃபு கவுன்சில் மாநில வக்ஃபு வாரியங்களை ஒருங்கிணைக்கிறது.
இந்த மத்திய கவுன்சில் கடந்த 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பின்னர், 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தில் சொத்துகளை வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என்று உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
தற்போதைய சட்ட திருத்தத்தின்படி, சொத்துக்களை நிர்வகிப்பதில் வக்ஃபு வாரியத்தின் நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசுக்கு சொந்தமான சொத்துக்களை வக்ஃபு வாரியம் தனது சொத்துகளாக அறிவிக்கும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சொத்துக்கள் அரசுடையதா அல்லது வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானதா என்ற முடிவை மாவட்ட ஆட்சியர்கள் எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முறையான ஆவணங்கள் இல்லாத சொத்துகள் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானதாக கருத்தப்பட்டு வந்தது. இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது. முறையான ஆவணங்கள் இல்லாத சொத்துக்கள் குறித்து இறுதிமுடிவை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்க சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.
மத்திய கணக்காளர் அல்லது மத்திய அரசு நியமிக்கும் அதிகாரி வக்ஃபு வாரியத்தின் கணக்குகளை சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாநில வக்ஃபு வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃபு கவுன்சிலில் பெண் நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.