வங்க தேச விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு வங்கதேசத்தில் இந்துக்களை பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இணையத்தில் செய்தி வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து வங்கதேசத்தை சேர்ந்த அடிப்படைவாதிகள், நியூயார்க் டைம்ஸ் அலுவலகத்தை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட செய்தியை திருத்தி இணையத்தில் வெளியிட்டது. இதற்காக அந்நிறுவனம் மன்னிப்போ, வருத்தமோ கோரவில்லை.