சட்ட விரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அலமாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்து, சென்னை புழல் சிலறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி, “தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.