புனேயில் மேலும் 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் புனேயில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜிகா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், கொசு உற்பத்தியாகத அளவுக்கு பொதுமக்கள் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என புனே மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.