டெல்லி லாஜ்பத் நகரில் 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை அதிகாரியை சிபிஐ கைது செய்தது.
லாஜ்பத் நகரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் மகன் வழக்கு ஒன்றில் அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கினார்.
இந்நிலையில், அவரை விடுவிக்க அமலாக்கத் துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. அதன்பேரில், அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.