தேனி மாவட்டம், பத்திரகாளிபுரம் பகுதியில் சாலையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலங்கார வளைவு அருகே கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியாகி சாலையில் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே இதனை சீர்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.