வங்கதேசத்தில் விரைவில் நிலைமை சீரடையும் என மத்திய வெளியுறவுத் துறை செயலர் ரண்தீர் ஜெய்ஸ்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்கதேசத்தில் சுமார் 19 ஆயிரம் இந்தியர்கள் வசிப்பதாகவும், அதில் 9 ஆயிரம் பேர் மாணவர்கள் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே விளக்கமளித்ததை சுட்டிக்காட்டினார்.
அதில் பெரும்பாலானோர் தாயகம் வந்துவிட்டதாக கூறிய ரண்தீர் ஜெய்ஸ்வால், எஞ்சியுள்ளவர்களை தாயகம் அழைத்து வர தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.