கும்பகோணம் மாநகராட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மேயர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் நான்கு கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் மாமன்ற கூட்ட அரங்கில் அந்தந்த வார்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மேயர் சரவணன் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் அதிமுக, சிபிஎம் கட்சியை சேர்ந்த 4 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
மொத்தம் 48 உறுப்பினர்கள் உள்ள நிலையில், திமுக உறுப்பினர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மேயர் சரவணன் கூட்ட அரங்கில் இருந்து செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை வெளியேறும் படி கூறினார்.
மேலும் கூட்டத்திற்க்கு வந்திருந்த காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர், வேறு ஒரு வேலையாக வந்ததாகவும், கூட்டத்திற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.