வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைக்கு சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றிய வங்கதேச மக்கள் பண உதவி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே அந்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக அன்சாருல்லா வங்க அணி, ஹிஸ்புத் தஹ்ரிர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைவாத குழுக்கள் எழுந்ததாகவும், அவற்றை ஷேக் ஹசீனா முறியடிக்க முயன்றதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேசத்தின் மதசார்பற்ற தன்மையை தகர்த்து, இந்துக்களை அச்சுறுத்துவதையே நோக்கமாக கொண்டு, வளைகுடா நாடுகளில் பணியாற்றும் வங்கதேச மக்களின் ஆதரவுடன் இதுபோன்ற அமைப்புகள் செயல்பட்டதாகவும், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியைத் துறந்ததில் அவை முக்கிய பங்கு வகித்ததாவும் தகவல் வெளியாகியுள்ளது.