பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதையடுத்து அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, நள்ளிரவு ஒரு மணியானாலும் கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களது ஆட்டத்தை ஆர்வத்துடன் கண்டுகளித்ததாக பாராட்டு தெரிவித்தார்.