இருநாட்டு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக மாலத்தீவுடனான உறவை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவுக்கு மூன்று நாள் அரசு பயணமாக சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், அதிபர் மொஹமட் முய்ஸுவை சந்தித்தார்.
பின்னர் அவர், மாலத்தீவு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் முகமது கசான் மௌமூனையும் சந்தித்தார். அவர்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகள் மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டனர். வெளிவிவகார அமைச்சர் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவு நாணய அதிகார சபையின் ஆளுநர் ஆகியோரையும் சந்தித்தார்.
பின்னர், டாக்டர் ஜெய்சங்கர், மாலத்தீவின் 28 தீவுகளில் நீர் மற்றும் சுகாதாரத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், இருநாட்டு மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக மாலத்தீவுடனான உறவை ஆழப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.