இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
பெரு நிறுவனங்களில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவின் அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அறிக்கை வெளியிட்டது.
ஆனால் இந்த அறிக்கை ஆதாரமற்றது என அதானி குழுமம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஹிண்டன்பர்க்கின் இந்த பதிவு, மீண்டும் இந்தியாவை மையப்படுத்தி ஒரு அறிக்கை வெளியாகுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.