உத்தரகாண்டில் ஆடி மாதத்தின் 4-வது திங்கட்கிழமையை ஒட்டி திரளான பக்தர்கள் கங்கையில் புனித நீராடினர்.
ஆடி மாதம் தொடங்கியது முதல் நாட்டின் பல பகுதிகளில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆடி மாதத்தின் 4-வது திங்கட்கிழமையான இன்று பக்தர்கள் ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.