ஜம்முகாஷ்மீரில் கனமழை எதிரொலியாக அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 29-ம் தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.