ஆகஸ்டு 26ஆம் தேதியை சென்னையில் விபத்து இல்லாத நாளாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் மிகப்பெரிய நோக்கம் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் கீழ்ப்பாக்கம் அருகே நடைபெற்ற “FLASH MOB” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நடனமாடி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து மக்களிடையே ஆழமாக பதிய வைக்க வேண்டியது கட்டாயம் என தெரிவித்தார்.
சென்னையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என சுதாகர் வலியுறுத்தினார்.