செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள அவர் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துவதாகவும், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளுக்கு ஆபத்து எனவும் அமலாக்கத்துறை வாதிட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர்.