2024ஆம் ஆண்டுக்கான NIRF தரவரிசையின் மாநில பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
மருத்துவ கல்வி நிறுவனங்களின் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தையும், வேலூர் சி.எம்.சி. கல்லூரி 3-வது இடத்தையும் பிடித்தது.
பல் மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் சென்னை சவீதா கல்லூரி முதலிடம் பிடித்தது. அதேபோல், கலைக்கல்லுரிகளுக்கான தர வரிசையில், கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி 7-வது இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி 8-வது இடத்தையும் பிடித்துள்ளன.