டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட பாரத ராஷ்ட்ர சமிதி நிர்வாகி கவிதாவின் ஜாமீன் மனு மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இடைத்தரகர்களுக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.