ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பள்ளி மாணவர் ஒருவர் வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாண்டாம்பாளையத்தைச் லித்துரன் என்ற சிறுவன் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இச்சிறுவன் வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருவதை அறிந்துள்ளார்.
இதனையடுத்து தாண்டாம்பாளையம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களிடம் உண்டியல் மூலம் 10 ஆயிரத்து 200 ரூபாய் நிதி திரட்டிய லித்துரன், அதனை காசோலையாக மாற்றி மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒப்படைத்தார்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, சிறுவனை வெகுவாக பாராட்டினார்.