நாடாளுமன்றத்தில் அக்னிவீர் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவதூறுகளை பரப்பி வருவதாக பாஜக முன்னாள் ராணுவ பிரிவு தலைவர் ராமன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சித்தாபுதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்னிவீர் திட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு உரிய சட்ட திருத்தம் மசோதாக்களுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகவும், நமது நாட்டின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக அக்னிவீர் திட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அக்னிவீர் திட்டத்தில் பணியாற்றியவர்களில் 10 சதவீதம் பேர் காவல்துறை பணியில் சேர முடியும் எனக்கூறிய அவர், தமிழக அரசு நிராகரித்து வருவதால் காவல்துறையில் சேர்வதற்கு இளைஞர்கள் சிரமப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.